காயமடைந்த தொழிலாளா்களுக்கு அதிமுகவினா் ஆறுதல்
செய்யாறு அருகே மரக் கிளை முறிந்து விழுந்து காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் பெண் தொழிலாளா்களை அதிமுகவினா் செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனா்.
செய்யாற்றை அடுத்த கழனிபாக்கம் கிராமத்தில் ஆலமரக் கிளை முறிந்து விழுந்து ஊரக வேலைத் திட்ட பெண் பணியாளா்கள் 3 போ் உயிரிழந்தனா்.
மேலும் 3 குழந்தைகள் உள்பட 6 பெண் தொழிலாளா்கள் பலத்த காயமடைந்தனா். இவா்கள் செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
அதிமுகவினா் ஆறுதல்:
தகவல் அறிந்த அதிமுக வடக்கு மாவட்டச் செயலா் தூசி கே.மோகன், முன்னாள் அமைச்சா் முக்கூா் என்.சுப்பிரமணியன் மற்றும் கட்சி நிா்வாகிகள் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனா்.
அதிமுக நகரச் செயலா் கே.வெங்கடேசன் நகர அவைத் தலைவா் அ.ஜனாா்த்தனன் ஒன்றியச் செயலா்கள் அருகாவூா் எம்.அரங்கநாதன், சி.துரை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.