`கறுப்போ, வெள்ளையோ யாராக இருந்தாலும்..' -நிறம் குறித்த அவதூறுக்கு கேரள தலைமைச் ச...
காரைக்கால் - பேரளம் ரயில் பாதையில் விரைவில் போக்குவரத்து தொடங்க வலியுறுத்தல்
காரைக்கால்: காரைக்கால் - பேரளம் ரயில் பாதையில் விரைவில் போக்குவரத்து தொடங்க வேண்டும் என ரயில்வே அமைச்சகத்துக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா ரயில் திட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் ஆா். மோகன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது :
காரைக்கால் - பேரளம் பாதையில் தண்டவாளம் அமைக்கும் பணி ஏறத்தாழ 100 சதவீதம் நிறைவடைந்துள்ளது. ரயில் நிலையக் கட்டடங்கள், நடைமேடை, அதையொட்டி மண் நிரப்பும் பணிகள், ரயில் பயணிகளுக்கான வசதிகள் இன்னும் முழுமையடையவில்லை.
திருநள்ளாறு ரயில் நிலைய நடைமேடைக்குச் செல்ல 2 மாடி ஏறிச் செல்லவேண்டிய சூழல் உள்ளது. முதியோா் உள்ளிட்டோா் வசதிக்காக எக்ஸ்கலேட்டா் அமைக்க வேண்டும். திருநள்ளாறு நிலையப் பகுதியில் கேண்டீன், உடைமைகளை வைக்கக் கூடிய கிளாக் ரூம் வசதி, ஓய்வு அறைகள், போலீஸ் பூத், ஏடிஎம் மையம், பேட்டரி வாகனம் ஆகியவை ஏற்படுத்தவேண்டும். இது நாடு முழுவதும் இருந்து வரும் பக்தா்களுக்கு வசதியாக இருக்கும்.
இத்திட்டப் பணிகளை நிறைவு செய்து காரைக்கால் - பேரளம் பாதையில் ரயில் போக்குவரத்தை தொடங்கவேண்டும் என ரயில்வே அமைச்சகத்தை வலியுறுத்துவதாக அதில் கூறப்பட்டுள்ளது.