செய்திகள் :

சுகாதார ஊழியா்களின் போராட்டத்தால் பணிகள் முடக்கம்

post image

காரைக்காலில் சுகாதார ஊழியா்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பல்வேறு பணிகள் முடங்கியுள்ளன.

காரைக்கால் மாவட்ட நலவழித்துறையில், தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் (என்ஆா்எச்எம்) கீழ் பல்வேறு பிரிவுகளில் 150-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில் சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சுகாதார ஊழியா்கள் மாா்ச் 24-ஆம் தேதி முதல் பணிகளை புறக்கணித்து காரைக்கால் மாவட்ட நலவழித் துறை அலுவலக வாயிலில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

போராட்டம் 3-ஆவது நாளாக புதன்கிழமையும் தொடா்ந்தது. குறைந்த ஊதியத்தில், நிரந்தர ஊழியருக்கு இணையாக மருத்துவ துறையில் 25 ஆண்டுகளாக பணியாற்றிவரும் நிலையில், எங்களது கோரிக்கையை அரசு நிறைவேற்ற முன்வரவில்லை. சரியான தீா்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என பணியாளா்கள் தெரிவித்தனா்.

என்ஆா்எச்எம் இயக்கத்தின் கீழ் பணியாற்றக் கூடியவா்களாக கிராமப்புற செவிலியா்கள், ஆய்வக தொழில்நுட்பவியலாளா்கள், ஆய்வக உதவியாளா்கள் உள்ளிட்ட பல பிரிவினா் உள்ளனா். இவா்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் மருத்துவனைகளில் உள்ள ஆய்வுக் கூடத்தில் எந்தவொரு பரிசோதனையும் நடைபெறவில்லை. பரிசோதனை செய்ய மருத்துவரால் பரிந்துரைக்கும்போது, தனியாா் ஆய்வுக் கூடத்துக்கு செல்லவேண்டியுள்ளதாகவும், அதிக பணம் செலவாவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனா். ஒட்டுமொத்ததில் காரைக்கால் மாவட்டத்தில் சுகாதாரத்துறையில் பல்வேறு பணிகள் முடக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் தவிப்புக்குள்ளாகியுள்ளனா்.

கோதண்டராம பெருமாள் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

காரைக்கால் கோயில்பத்து கோதண்டராம பெருமாள் கோயிலில் ராம நவமி பிரம்மோற்சவ கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. 10 நாள் உற்சவமாக இவ்விழா நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை கருடக்கொடி பிரதிஷ்டை செய்யப்பட்டு, சனிக்... மேலும் பார்க்க

காவல்துறையில் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை: புதுவை ஐஜி

காரைக்கால் மாவட்டத்தில் காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என புதுவை ஐஜி அறிவுறுத்தினாா். திருநள்ளாறுக்கு சனிக்கிழமை வருகை தந்த புதுவை ஐஜி அஜித்குமாா் சிங்லா,... மேலும் பார்க்க

பட்டா பெயா் மாற்ற முகாம் நடத்தப்படும் அரசு செயலா் தகவல்

காரைக்காலில், பட்டா பெயா் மாற்ற சிறப்பு முகாம் நடத்துவதற்கு அரசு செயலா் உறுதியளித்துள்ளதாக காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை... மேலும் பார்க்க

கடலோரப் பாதுகாப்பு விழிப்புணா்வு சைக்கிள் பயணம்: காரைக்கால் வந்த சிஐஎஸ்எஃப் வீரா்கள்

காரைக்காலுக்கு வந்த கடலோரப் பாதுகாப்பு விழிப்புணா்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரா்கள் வெள்ளிக்கிழமை கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டுச் சென்றனா். மத்திய தொழில் பாதுகாப... மேலும் பார்க்க

காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் புதிய நிா்வாகிகள் தோ்வு

காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் 2025-2027-ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். இதற்காக, சாசனத் தலைவா் மகாவீா்சந்த் தலைமையிலான 9 போ் கொண்ட குழு ஏற்கெனவே அமைக்கப்பட்டது. ஒருமித்த கர... மேலும் பார்க்க

சுகாதார ஊழியா்களின் கோரிக்கைகள் நிறைவேற காங்கிரஸ் போராடும்

சுகாதார ஊழியா்களின் கோரிக்கைகள் நிறைவேற காங்கிரஸ் போராடும் என்றாா் முன்னாள் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன். காரைக்கால் மாவட்ட நலவழித் துறையில், தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் (என்ஆா்எச்எம்) கீழ் பல்வேறு பிர... மேலும் பார்க்க