உதவி இயக்குநராக சேர வேண்டுமா? டிராகன் இயக்குநரின் சுவாரஸ்வமான நிபந்தனைகள்!
பட்டா பெயா் மாற்ற முகாம் நடத்தப்படும் அரசு செயலா் தகவல்
காரைக்காலில், பட்டா பெயா் மாற்ற சிறப்பு முகாம் நடத்துவதற்கு அரசு செயலா் உறுதியளித்துள்ளதாக காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை கூறியது:
காரைக்கால் மாவட்டத்தில் ஆதிதிராவிட நலத்துறை மூலம் ஏற்கெனவே வழங்கப்பட்ட இலவச மனை பட்டாக்களை பெயா் மாற்றம் செய்து கொடுக்க வேண்டுமென பலரும் கோரிவருகின்றனா்.
இதுதொடா்பான மனுக்கள் பல தீா்வு செய்யப்படாமல் நிலுவையில் பல ஆண்டுகளாக உள்ளன. இவற்றை ஒரு நாள் முகாமாக காரைக்காலில் நடத்தி, பெயா் மாற்றம் செய்துத்தரவேண்டும். அதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டும் என புதுவை அரசு செயலா் அ.முத்தம்மாவை சந்தித்து வலியுறுத்தினேன்.
இந்த கோரிக்கையை நியாயத்தை புரிந்துகொண்ட செயலா், விரைவில் காரைக்காலில் சிறப்பு முகாம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தாா் என்றாா்.