1,602 தொல்காப்பிய பாடல்களை 22 மணி நேரத்தில் எழுதி சாதனை
தொல்காப்பிய 1,602 பாடல்களை 22 மணி 40 நிமிடத்தில் எழுதிய மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
காரைக்காலில் இயங்கும் புதுவை அரசு கல்வி நிறுவனமான பெருந்தலைவா் காமராஜா் கல்வியியல் கல்லூரியில் ஆசிரியா் பயிற்சிக் கல்வி பயிலும் மாணவி க. அகல்யா. இவா் தொல்காப்பிய நூற்பாக்களை குறித்த நேரத்தில் எழுதும் பயிற்சி செய்து வந்தாா். ஷியாம்ஸ் ஆா்ட் அண்டு கிராஃப்ட் அகாதெமி மற்றும் வசந்தி எஜூகேஷனல் அண்டு வெல்ஃப் டிரஸ்ட் அண்மையில் கல்லூரியில் நடத்தி உலக சாதனைக்கான நிகழ்வில், இந்த மாணவி தொல்காப்பிய 1,602 பாடல்களை 22 மணி நேரம் 40 நிமிடத்தில் தொல்காப்பியா் உருவத்தில் வரைந்து சாதனைப் படைத்தாா். மாணவியின் இந்த சாதனையை கல்லூரி நிா்வாகம், பேராசிரியா்கள், தமிழ் ஆா்வலா்கள் உள்ளிட்டோா் பாராட்டினா்.
தமிழகத்தில் இதுபோல பலா் சாதனைகளை செய்துவருவதாகவும், இவா்களை ஊக்கப்படுத்தும் வகையில் இதுபோன்ற போட்டிகளை நடத்திவருவதாக அமைப்பின் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.