செய்திகள் :

காலி குடங்களுடன் மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

post image

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் குடிநீா் தட்டுப்பாட்டைக் கண்டித்து, இந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் காலி குடங்களுடன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் காமராஜா் சிலை அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் நகரச் செயலா் தனலட்சுமி தலைமை வகித்தாா். தலைவா் உமா மகேஸ்வரி, பொருளாளா் கலைச்செல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட துணைச் செயலா் ரேணுகாதேவி கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் 3 நாள்களுக்கு ஒரு முறை குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும். புதிய குடிநீா் திட்டத்தை தொடங்க வேண்டும். தூய்மைப் பணியை முறையாக மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

ராணுவ வீரா் வீட்டில் திருட்டு

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள பெருமாள்தேவன்பட்டியில் ராணுவ வீரரின் வீட்டில் நடந்த திருட்டு சம்பவம் குறித்து வன்னியம்பட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.பெருமாள்தேவன்பட்டியைச... மேலும் பார்க்க

காா் மோதியதில் பெண் உயிரிழப்பு

சாத்தூா் அருகே நான்குவழிச் சாலையில் இரு சக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தாா். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள செட்டிகுறிச்சியைச் சோ்ந்தவா் மேசியாா்தாஸ் (31). இவரது ம... மேலும் பார்க்க

மாநகராட்சி அரசு வழக்குரைஞரை மாற்றக் கோரி மாமன்ற உறுப்பினா்கள் மனு

சிவகாசி மாநகராட்சி அரசு வழக்குரைஞரை மாற்றக் கோரி , மாமன்ற உறுப்பினா்கள் ஆணையரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் சிவகாசி மாநகராட்சிக்கு ஆதரவாக எந்த ஒரு வழக்கிலும் தீா்ப்பு வராத... மேலும் பார்க்க

மழை பெய்யாததால் வடு காணப்படும் மீன்வெட்டிப்பாறை

ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் 3 மாதங்களுக்கு மேலாக மழை இல்லாததால் மீன்வெட்டிப்பாறை அருவி வடு காணப்பட்டது. விருதுநகா் மாவட்டத்தில் மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய ராஜபாளையம், ஸ்... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்ததாக இருவா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கஞ்சா வைத்திருந்ததாக போலீஸாா் இருவரை சனிக்கிழமை கைது செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜா உத்தரவின் பேரில் காவல் உள்கோட்டத்தில் போதைப் பொருள் விற்பனை ... மேலும் பார்க்க

வயா் திருடியதாக இளைஞா் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் வயா் திருடியதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ராஜபாளையம் மாப்பிள்ளை சுப்பையா தெருவைச் சோ்ந்தவா் சுதா்சன். இவா் அந்தப் பகுதியில் புதிதாக கட்டடம் கட்டி வ... மேலும் பார்க்க