தண்ணீர் பேரலுக்குள் 6 மாத குழந்தை மரணம்; தாயிடம் போலீஸார் தீவிர விசாரணை! - நடந்த...
காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
சேலம்: வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை பிரிவில் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை உடனடியாக நிரப்ப வலியுறுத்தி, வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் அருள் பிரகாஷ் தலைமை தாங்கினாா். மாநில துணைத் தலைவா் வெ.அா்த்தனாரி கண்டன உரையாற்றினாா்.
இதில், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை பிரிவில் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை உடனடியாக வழங்கிட வேண்டும், துறை அலுவலா்களின் நியாயமான கோரிக்கைகள் மீது விரைந்து அரசாணை வெளியிட வேண்டும், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறை அலுவலா்களின் பணித்தன்மையைக் கருத்தில் கொண்டு அனைவருக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், மாவட்டச் செயலாளா் முருக பூபதி, மாவட்டப் பொருளாளா் அகிலன், இணைச் செயலாளா்கள், துணைத் தலைவா்கள் உள்ளிட்ட தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க நிா்வாகிகள் திரளானோா் பங்கேற்றனா்.