அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்: `காவல்துறை மீது சந்தேகம்...' - கம்யூனிஸ்ட் கட்சி க...
கால்நடை மருத்துவ முகாம்
கொடைக்கானல் அருகேயுள்ள மச்சூா் பகுதியில் வனத் துறை சாா்பில் கால்நடைகளுக்கான மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமில் கால்நடை மருத்துவா் நவீன் தலைமையில், கால்நடைகளுக்கு தடுப்பூசி, பூச்சி மருந்து வழங்கப்பட்டன. பின்னா், கால்நடைகளை வளா்க்கும் விவசாயிகளுக்கு கால்நடைகளை எப்படி பராமரிக்க வேண்டும். இதற்கு தேவையான உணவுப் பொருள்கள், மாத்திரைகள் பயன்படுத்துவது குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இந்த முகாமில் மாடு, குதிரை, ஆடு, கோழி உள்ளிட்ட100-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் வனவா் ஜெயச்சந்திரன், வேட்டைத் தடுப்புக் காவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.