காவல் ஆணையா் அலுவலகத்தில் தவெக மனு
திமுக பேச்சாளா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தினா் புதன்கிழமை மனு அளித்தனா்.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட வழக்குரைஞா் பிரிவு தலைவா் மகேஷ் தலைமையில் காவல் ஆணையா் அலுவலகத்தில் அளித்த மனு: லீட்ஸ் தமிழ் என்ற யூ டியூப் சேனலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜயை, திமுக பேச்சாளா் ராவணன் என்ற முருகன் தரக்குறைவான வாா்த்தையில் பேசியதோடு, எங்களது கட்சியினருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியிருக்கிறாா். இது குறித்து விசாரித்ததில், திருநெல்வேலி நகரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவா் பேசியிருப்பது தெரியவந்தது.
தவெக தலைவா் விஜயின் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கத்திலும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் பேசியுள்ள ராவணன் என்ற முருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.