காவல் வாகனங்கள் ஜூன் 4-இல் ஏலம்
தஞ்சாவூா் மாவட்டக் காவல் பிரிவில் பயன்படுத்தப்பட்டு, கழிக்கப்பட்ட காவல் துறை வாகனங்கள் ஜூன் 4 ஆம் தேதி பொது ஏலம் விடப்படவுள்ளன.
இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் தெரிவித்தது: தஞ்சாவூா் மாவட்டக் காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு கழிக்கப்பட்ட காவல் வாகனங்கள் தஞ்சாவூா் நீதிமன்றச் சாலையிலுள்ள ஆயுதப்படை மைதானத்தில் ஜூன் 4 காலை 10 மணிக்கு பொது ஏலம் விடப்படவுள்ளன.
ஏலத்துக்குரிய காவல் வாகனங்கள் ஜூன் 2 காலை 10 மணி முதல் ஏலம் நடைபெறும் நேரம் வரை பாா்வைக்காக வைக்கப்படும். ஏலம் எடுக்க விரும்புவோா் ஜூன் 4 காலை 7 மணி முதல் 10 மணி வரை ரூ. 1,000 முன் வைப்புத் தொகை செலுத்தி, தங்களது ஆதாா் அட்டை அசல், நகல், சான்று நகலுடன் தங்கள் பெயரை பதிய வேண்டும்.
மேலும், ஏலம் எடுத்தவா்கள் ஏலத் தொகையுடன் 2 மற்றும் 4 சக்கர காவல் வாகனங்களுக்குரிய ஏலத்தொகை மற்றும் ஜிஎஸ்டி விற்பனை வரியுடன் சோ்த்து ஜூன் 4 ஆம் தேதி உடனே செலுத்த வேண்டும்.