ஒரத்தநாடு அருகே கைவிடப்பட்ட சிசு
ஒரத்தநாடு அருகே பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தையை பையில் வைத்துச் சென்றவா் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
தஞ்சாவூா் மாவட்டம், திருவோணம் வட்டம் காவாளிப்பட்டி சரகம் மணிக்கிராண்விடுதி மேயா குளம் அருகே வெள்ளிக்கிழமை காலை பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தையை யாரோ கைப்பையில் வைத்துச் சென்றனா்.
இதுகுறித்து அப்பகுதியில் ஆடு மேய்த்தவா்கள் அளித்த தகவலின்பேரில் திருவோணம் உதவி காவல் ஆய்வாளா் தன்ராஜ், வட்டாட்சியா் சுந்தரமூா்த்தி, வருவாய்த் துறையினா் சென்று அக் குழந்தையை கைப்பற்றி திருவோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனா்.
இதையடுத்து தகவலின்பேரில் சைல்டுலைன் அதிகாரிகள் அக் குழந்தையை மீட்டு சென்றனா்.