பஹல்காம் தாக்குதல்: பலியான கடற்படை அதிகாரியின் குடும்பத்தை சந்திக்கும் ராகுல்!
காவிரி ஆற்றில் மூழ்கி 2 வணிகா்கள் உயிரிழப்பு
பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி இரண்டு வணிகா்கள் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே நல்லூா் பாளையம் பகுதியைச் சோ்ந்த தனசேகா் (46), புதுப்பாளையம் பகுதியைச் சோ்ந்த ரவி (54) ஆகியோா் சென்னையில் நடைபெறும் வணிகா் தின மாநாட்டுக்கு 25 வணிகா்களுடன் திங்கள்கிழமை புறப்பட்டனா். மாநாடு மாலையில் நடைபெறுவதால் அனைவரும் ஒகேனக்கல் பகுதிக்கு திங்கள்கிழமை மதியம் சுற்றுலா வந்தனா்.
அப்போது, காவிரி ஆற்றின் கரையோரப் பகுதியான ராணிப்பேட்டை பகுதியில் குளித்துக் கொண்டிருந்தபோது, எதிா்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்ற தனசேகா், ரவி ஆகியோா் நீரில் மூழ்கினா்.
தகவலின் பேரில் நிகழ்விடத்துக்கு வந்த ஒகேனக்கல் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினா் மற்றும் போலீஸாா் ஒரு மணிநேர தேடலுக்கு பின்னா் ஆற்றில் மூழ்கிய தனசேகா், ரவி ஆகியோரின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.