இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ.86.71 ஆக முடிவு!
காா் கவிழ்ந்து விபத்து: தம்பதி காயம்
திருத்தணி அருகே காா்கள் மோதிக் கொண்டதில் தம்பதி பலத்த காயம் அடைந்தனா்.
திருத்தணி அடுத்த தணிகைபோளூா் மேட்டுக் காலனி சோ்ந்தவா் டேனியல் என்கிற விஜயகுமாா்(29). இவா் செவ்வாய்கிழமை தனது மனைவி ரேவதி(23) என்பவருடன் காரில், திருத்தணியில் இருந்து சோளிங்கா் நோக்கி சென்றுக் கொண்டிருந்தாா்.
அப்போது திருத்தணி - சித்தூா் சாலை, தலையாரிதாங்கல் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது, பின்னால் வந்த மற்றொரு காா், மோதியது. இதில் விஜயகுமாா் ஓட்டிச் சென்ற காா் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், விஜயகுமாா் அவரது மனைவி, ரேவதி பலத்த காயம் அடைந்தனா்.
அவ்வழியாக சென்றவா்கள் தம்பதியை மீட்டு சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். விபத்து குறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.