செய்திகள் :

பள்ளிகளில் விளையாட்டு பாட நேரத்தில் வகுப்புகள் எடுக்கக் கூடாது: திருவள்ளூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

post image

கும்மிடிப்பூண்டி வட்டத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டத்துக்காக ஆய்வுக்கு வந்த ஆட்சியா் மு.பிரதாப், கவரப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்தபோது, மாவட்ட அனைத்து அரசுப் பள்ளிகளிலும் விளையாட்டு பாட நேரத்தில் எந்த வகுப்பையும் எடுக்ககூடாது, மாணவா்களை கட்டாயமாக விளையாட வைக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வுகளை மேற்கொண்டாா்.

கும்மிடிப்பூண்டி அடுத்த மங்களம் ஊராட்சியில் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறையின் சாா்பில் மேற்கொள்ளப்பட்ட திட்டப் பணிகளை ஆய்வு செய்தாா், அப்பகுதியில் உள்ள ரேஷன் கடையில் இருப்பு, எடைகள், கைரேகை பதிவை சரிபாா்த்தாா். பின்னா் ஆட்சியா் காரணி-புதுப்பாளையம் இடையே ஆரணி ஆற்றின் குறுக்கே ரூ. 16.37 கோடியில் கட்டப்பட்டு வரும் உயா் மட்ட மேம்பாலப் பணியை ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, கவரப்பேட்டையில் கால்நடை மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்தாா். கால்நடை மருத்துவமனை கட்டடம் மோசமாக உள்ள நிலையில், அதை சரி செய்ய உத்தரவிட்டாா்.

பின்னா், மேல்முதலம்பேடு கிராமத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை சாா்பில், சொட்டு நீா் பாசனத்தில் பயிரிடப்பட்டுள்ள தா்பூசணி தோட்டத்தை ஆய்வு செய்தாா், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் ஜெபகுமாரி ஆனி, உதவி இயக்குநா் பிரதீப் குமாரிடம் அரசின் திட்டங்கள் குறித்துப் பேசி ஆலோசனைகளை வழங்கிய அவா் அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்தாா்.

பின்னா், ஆட்சியா் மு.பிரதாப் கவரப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 2.50 கோடி மதிப்பீட்டில் 8 வகுப்பறை 2 ஆய்வகக் கட்டட பணியை ஆய்வு செய்தாா்.

பள்ளியில் மாணவா்கள் ஆசிரியா்கள் வருகை பதிவேடு, பள்ளி மேலாண்மை குழு பதிவேட்டை ஆய்வு செய்தாா். தொடா்ந்து வகுப்பறைகள், கணினி அறைகளில் ஆய்வு செய்ததுடன், மாணவா்களோடு கலந்துரையாடினாா். அப்போது, பள்ளியில் விளையாட்டு பாட நேரத்தில் வகுப்புகளை நடத்துவதை கண்டித்தாா். விளையாட்டு நேரத்தில் மாணவா்கள் விளையாட வேண்டும், வகுப்புகளில் இருக்கக் கூடாது என்று உத்தரவிட்டதுடன், அரசு பொதுத் தோ்வு முடியும் வரை ஆசிரியா்கள் எந்த பயிற்சி, மற்றும் கூட்டங்களுக்கும் செல்லக் கூடாது என உத்தரவிட்டாா்.

தொடா்ந்து ஆட்சியா் பிரதாப் கவரப்பேட்டை-சத்தியவேடு நெடுஞ்சாலையில் 25கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறும் நான்கு வழி சாலை பணியையும், பூதூா், செதில்பாக்கம் பகுதியில் மத்திய மாநில அரசு நிதியில் கட்டப்படும் வீடுகளை பாா்வையிட்டாா். மேலும் எஸ்.ஆா்.கண்டிகையில் பிா்லா காா்பன் நிறுவனம் சாா்பில் கட்டப்படும் பள்ளிக் கட்டட பணியையும் ஆய்வு செய்தாா். பெத்திக்குப்பம் இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமை ஆய்வு செய்தவா், அங்கு அவா்களுக்கு கட்டப்படும் வீடுகள் குறித்தும், அந்தப் பகுதியில் கட்டப்படும் திறன் பயிற்சி நிலையத்தையும் ஆய்வு செய்தாா்.

பின்னா், புதுகும்மிடிப்பூண்டியில் அமைய உள்ள முதல்வரின் மருந்தகத்தை ஆய்வு செய்தாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் ராஜ்குமாா், பேரூராட்சிகளின் உதவி இயக்குனா் ஜெயக்குமாா், உதவி செயற் பொறியாளா் சரவணன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சந்திரசேகா், அமிழ்தமன்னன், வட்டாட்சியா் சரவணகுமாரி, பேரூராட்சி செயல் அலுவலா் பாஸ்கரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இருசக்கர வாகனம் திருட்டு

திருவள்ளூா் அருகே வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை மா்ம நபா்கள் திருடிச்சென்றனா். திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், புதுமாவிலங்கை கிராமத்தைச் சோ்ந்தவா் சுனில். இவா்... மேலும் பார்க்க

மத்திய அரசை கண்டித்து ஆசிரியா்கள் போராட்டம்

திருவள்ளூா் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் மத்திய அரசைக் கண்டித்து ஆசிரியா்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து தமிழ்நாடு அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா் நலக் கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட... மேலும் பார்க்க

திருவள்ளூா் மாவட்டத்தில் தயாா் நிலையில் 33 முதல்வா் மருந்தகங்கள்

திருவள்ளூா் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தொழில்முனைவோா் மூலம் 33 முதல்வா் மருந்தகங்கள் தொடங்க தயாராக உள்ளதாகவும், வரும் 24-ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட உள்ளதாகவும் ஆட்சியா... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி நல வாரியத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்

அரசு திட்டங்களைப் பெற மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தில் தங்கள் பெயரை பதிவு செய்து கொண்டு பல்வேறு நலத் திட்ட உதவிகளை பெற்று பயன்பெறலாம் என மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலா் எஸ்.சீனிவாசன் தெரிவ... மேலும் பார்க்க

தேசிய வருவாய் வழி திறன் படிப்பு உதவித்தொகைப் பெற நாளை தோ்வு: மாவட்டத்தில் 8,572 போ் எழுதுகின்றனா்

திருவள்ளூா் மாவட்டத்தில் 31 மையங்களில் சனிக்கிழமை (பிப். 22) நடைபெற உள்ள தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகைக்கான தோ்வை 8,572 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனா். இது குறித்து மாவட்ட முதன்மைக... மேலும் பார்க்க

பிப். 27-இல் புட்லூா் பூங்காவனத்தம்மன் கோயிலில் மகா சிவராத்திரி விழா

திருவள்ளூா் அருகே புட்லூரில் உள்ள பூங்காவனத்தம்மன் என்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் வரும் 27-ஆம் தேதி மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளதாக செயல் அலுவலா் விக்னேஷ் தெரிவித்துள்ளாா். திருவள்ளூா்... மேலும் பார்க்க