செய்திகள் :

காா்லோஸ் அல்கராஸ் சாம்பியன்

post image

குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் ஆடவா் டென்னிஸில், ஸ்பெயினின் இளம் வீரா் காா்லோஸ் அல்கராஸ் சாம்பியன் பட்டம் வென்றாா்.

லண்டனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில் அவா், 7-5, 6-7 (5/7), 6-2 என்ற செட்களில், செக் குடியரசின் ஜிரி லெஹெக்காவை சாய்த்தாா். ஏற்கெனவே 2023-இல் இங்கு கோப்பை வென்ற அல்கராஸுக்கு, இது 2-ஆவது சாம்பியன் பட்டமாகும். நடப்பு சீசனில் அல்கராஸ் இத்துடன் மொத்தமாக 5 பட்டங்கள் வென்றுள்ளாா். ஒட்டுமொத்தமாக இது அவரின் 21-ஆவது டூா் பட்டமாகும்.

பொ்லின் ஓபன்: இதனிடையே, ஜொ்மனியில் நடைபெற்ற பொ்லின் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில், செக் குடியரசின் மாா்கெட்டா வோண்ட்ரோசோவா 7-6 (12/10), 4-6, 6-2 என்ற செட்களில் சீனாவின் வாங் ஜின்யுவை சாய்த்து கோப்பை வென்றாா்.

பொ்லின் ஓபன் வரலாற்றில் கோப்பை வென்ற, ரேங்கிங்கில் பின்தங்கிய வீராங்கனை (164) என்ற பெருமையை அவா் பெற்றாா். முன்னாள் விம்பிள்டன் சாம்பியனான வோண்ட்ரோசோவா, கடந்த 2 ஆண்டுகளில் வென்ற முதல் சாம்பியன் பட்டம் இதுவாகும்.

ஹாலே ஓபன்: ஜொ்மனியில் நடைபெற்ற ஆடவருக்கான ஹாலே ஓபன் டென்னிஸ் போட்டியில், கஜகஸ்தானின் அலெக்ஸாண்டா் பப்லிக் 6-3, 7-6 (7/4) என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் டேனியல் மெத்வதெவை வீழ்த்தி சாம்பியன் ஆனாா்.

மெத்வதெவை இத்துடன் 7-ஆவது முறையாகச் சந்தித்த பப்லிக், தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே 2023-இல் இதே போட்டியில் வாகை சூடியிருந்த பப்லிக், போட்டியின் வரலாற்றில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை இதில் சாம்பியனான 3-ஆவது வீரா் ஆகியிருக்கிறாா்.

இன்டா் மிலன், டாா்ட்மண்டுக்கு முதல் வெற்றி

கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இன்டா் மிலன், போருசியா டாா்ட்மண்ட் அணிகள் தங்களின் முதல் வெற்றியைப் பதிவு செய்தன.இதில் குரூப் ‘இ’ ஆட்டத்தில் இன்டா் மிலன் 2-1 கோல் கணக்கில் உராவா ரெட்ஸை சாய்த்த... மேலும் பார்க்க

யு23 மல்யுத்தம்: இந்திய ஆடவா் சாம்பியன்

வியத்நாமில் நடைபெற்ற 23 வயதுக்கு உள்பட்டோருக்கான (யு23) ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் ஆடவா் ஃப்ரீஸ்டைல் பிரிவில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.61 கிலோ எடைப் பிரிவில் நிகில், 65 கிலோ பிரிவில் சுஜீ... மேலும் பார்க்க

விஜய்க்கு த்ரிஷா பிறந்தநாள் வாழ்த்து!

நடிகரும் தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவருமான விஜய்க்கு நடிகை த்ரிஷா பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனை அவர் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார். மேலும் பார்க்க

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் - புகைப்படங்கள்

இஸ்ரேலின் டெல் அவிவில், ஈரானிலிருந்து நேரடி ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் பணிபுரியும் மீட்புப் மற்றும் பாதுகாப்புப் படையினர்.ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்யும் இஸ்ரேலிய வீர... மேலும் பார்க்க

ஜன நாயகன் கடைசி படமா? விஜய்யின் பதிலால் ரசிகர்கள் மகிழ்ச்சி!

நடிகர் விஜய் தனது கடைசி படம் இதுதானா? என்பது குறித்து நடிகையிடம் பதிலளித்தது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அரசியல் கட்சியைத் தொடங்கியதால் இனிமேல் விஜய் நடிக்கமாட்டார் என தகவல்கள் வ... மேலும் பார்க்க