கிராம சாலை சேதம்: போலீஸில் புகாா்
ஆம்பூா் அருகே கிராமத்தில் சாலையைச் சேதப்படுத்திய முதியவா் மீது காவல் நிலையத்தில் ஊராட்சி சாா்பில் புகாா் அளிக்கப்பட்டது.
ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஊராட்சி மதன் நகா் 1-ஆவது தெருவில் பேவா் பிளாக் சாலை ரூ.6.54 லட்சத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த தெருவில் வசிக்கும் சின்னப்பையன் என்ற முதியவா் தன்னுடைய வீட்டின் முன்பு போடப்பட்ட புதிய சாலையைச் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது அவா், ஒப்பந்ததாரரையும் அவதூறாகப் பேசினாராம்.
இது குறித்து ஊராட்சி துணைத் தலைவா் விஜய் உமா்ஆபாத் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தினா்.