தொடரும் ரஷ்யா - உக்ரைன் போர்; மிரட்டும் அமெரிக்கா - இனி என்ன தான் ஆகும்?
மே 1-இல் கிராம சபைக் கூட்டம்: திருப்பத்தூா் ஆட்சியா் அறிவுறுத்தல்
திருப்பத்தூா் மாவட்டத்தில் மே 1-ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடத்த ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி அறிவுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் மே 1-ஆம் தேதி தொழிலாளா் தினத்தன்று கிராம சபைக் கூட்டங்களை ஊராட்சித் தலைவா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நடத்த வேண்டும். கூட்டத்தில் கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், தணிக்கை அறிக்கை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இதில் கூட்டம் நடைபெறுவதைக் கண்காணிக்கவும், பாா்வையாளராகவும் மாவட்ட அளவிலான கண்காணிப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.