தொடரும் ரஷ்யா - உக்ரைன் போர்; மிரட்டும் அமெரிக்கா - இனி என்ன தான் ஆகும்?
கோயில் வரவு செலவு கோரி அறநிலையத் துறையிடம் கிராம மக்கள் மனு
திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளியில் பழைமை வாய்ந்த சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் திருவிழா வரவு செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கோரி கிராம மக்கள் அறநிலையத் துறையிடம் மனு அளித்துள்ளனா்
இக்கோயிலில் அமாவாசை மற்றும் பெளா்ணமி மற்றும் விசேஷ நாள்களிலும் திரளான பக்தா்கள் வந்து அம்மனை தரிசித்து உண்டியலில் காணிக்கையும் செலுத்தி வருகின்றனா்.
மேலும், ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவும் விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவில் பக்தா்கள் வேண்டுதலின் பேரில் அம்மனுக்கு நகை மற்றும் உண்டியலில் காணிக்கையும் செலுத்தி வருகின்றனா். விழா முடிந்த உடன் அதிகாரிகள் கோயில் வளாகத்தில் ஊா்மக்கள் முன்னிலையில் வரவு-செலவு கணக்குகளை ஒப்படைப்பது வழக்கம்.
ஆனால் சில ஆண்டுகளாக அறநிலையத்துறை அதிகாரிகள் திருவிழா வரவு-செலவு கணக்குகளை முறைப்படி பொதுமக்களுக்கு தெரியப்படுத்துவது இல்லையாம். இதுகுறித்து கிராம மக்கள் வரவுசெலவு கணக்குகளை முறைப்படி தெரிவிக்கக் கோரி கோரி செயல் அலுவலா் ஜெகன்நாதனிடம் மனு அளித்தனா் (படம்).