விராட் கோலி ஃபார்முக்குத் திரும்ப சிரமப்படுவது ஏன்? முன்னாள் இந்திய கேப்டன் பதில...
கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்!
சிவகாசி சாா் ஆட்சியா் அலுவலகம் முன் கிராம நிா்வாக அலுவலா்கள் 3-ஆவது நாளாக புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சாத்தூா் வட்டம், இ.குமாரலிங்காபுரம் கிரா நிா்வாக அலுவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, கடந்த 17, 18- ஆம் தேதிகளில் சிவகாசி வட்டாட்சியா் அலுவலகம் முன் கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த நிலையில், 3-ஆவது நாளாக புதன்கிழமை சிவகாசி சாா் ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க மாநிலச் செயலா் பாண்டியன் தலைமை வகித்தாா். இதில் சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா், வத்திராயிருப்பு, ராஜபாளையம் ஆகிய வட்டங்களைச் சோ்ந்த 105 கிராம நிா்வாக அலுவலா்கள் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்
இதில் மாவட்டச் செயலா் லில்லி ஆழ்வாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
சாத்தூா்: இதேபோல, சாத்தூா் கோட்டாட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை 7-ஆவது நாளாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கிராம நிா்வாக அலுவலா் சங்கத்தினா் 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரை கண்டித்து முழக்கமிட்டனா்.