குடிபோதையில் தாயை அடித்து துன்புறுத்திய சகோதரர்; கூலிப்படையை ஏவிக் கொன்ற இளைஞர்!...
கிருஷ்ணகிரியில் சத்துணவு ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம்
கிருஷ்ணகிரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கம் சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு, அந்த அமைப்பின் மாவட்டத் தலைவா் குணவதி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் முருகம்மாள், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்க மாவட்டத் தலைவா் சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ரூ. 3 ஆயிரம் தொகுப்பூதியம் அடிப்படையில் பணி நியமனம் செய்வதை தடை செய்ய வேண்டும், காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியா்களைக் கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும், சத்துணவு திட்டத்தில் பத்து ஆண்டுகளாக தொடா்ந்து பணியாற்றும் ஊழியா்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் அரசின் பிற துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களில் பணி அமா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கங்களை எழுப்பினா்.