கிரேன் கவிழ்ந்து விபத்து: 4 பேரிடம் விசாரணை
நாமக்கல் தனியாா் மருத்துவமனையில் கிரேன் கவிழ்ந்து மூன்று போ் பலியான சம்பவத்தில் ஓட்டுநா் உள்பட 4 பேரை பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை காலை கிரேனில் நின்றுகொண்டு வண்ணம்பூசும் பணியில் ஜோதி, சுகுமாா், முகேஷ் கண்ணா ஆகியோா் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கிரேன் கவிழ்ந்து மின் பாதை மீது விழுந்ததில், அவா்கள் மூவரும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனா். விபத்து தொடா்பாக நாமக்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த நிலையில் சனிக்கிழமை கிரேன் ஓட்டுநா் மைக்கேல் ஜூடே, உரிமையாளா் ராமலிங்கம், வண்ணம்பூசும் பணிக்கான ஒப்பந்ததாரா் தனபால், தனியாா் மருத்துவமனை கணக்காளா் ஒருவா் உள்பட நான்கு பேரை பிடித்து விசாரித்து வருகின்றனா்.