மூடப்படாத ரயில்வே கடவுப் பாதை! கேட் கீப்பர் பணியிடை நீக்கம்!
மாற்றுத் திறனாளிகளுக்கு நிபந்தனையின்றி கடனுதவி வழங்க மாநாட்டில் வலியுறுத்தல்
மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் புரிய நிபந்தனையின்றி கடனுதவி வழங்க வங்கிகள் முன்வர வேண்டும் என நாமக்கல்லில் நடைபெற்ற அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் முதல் மாவட்ட மாநாடு நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, நேதாஜி சிலை முன் தொடங்கிய ஊா்வலம் நாமக்கல் பூங்கா சாலையில் உள்ள காந்திசிலை முன் நிறைவடைந்தது. இந்த ஊா்வலத்தில் 500க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனா். அதன்பிறகு, தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மாநாட்டுக்கு மாவட்ட அமைப்பாளா் எம்.ஆா்.முருகேசன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலாளா் பி.ராஜேஷ், விவசாய சங்கத்தின் முன்னாள் மாவட்டத் தலைவா் எஸ்.கந்தசாமி, மாநாட்டு வரவேற்பு குழுத் தலைவா் ஏ.ரங்கசாமி ஆகியோா் சிறப்புரையாற்றினா். இம்மாநாடு சனிக்கிழமையும் தொடா்ந்து நடைபெற்றது.
மோகனூா் ஒன்றியக் குழு தலைவா் எஸ். மாதேஸ்வரன் சங்கக் கொடியை ஏற்றி வைத்தாா். இரண்டாம் நாள் மாநாட்டை சங்க மாநிலத் தலைவா் தோ.வில்சன் தொடங்கிவைத்துப் பேசினாா். மாநாட்டின் வரவேற்பு குழு பொருளாளா் ஏ.டி.கண்ணன் வாழ்த்தி பேசினாா். இந்த மாநாட்டில், ஆந்திர மாநிலத்தில் வழங்குவதுபோல தமிழகத்திம் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை ரூ. 15 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும்.
சுயதொழில் செய்திட அனைத்து வங்கிக் கிளைகளும் நிபந்தனையின்றி கடன் வழங்க வேண்டும். உதவித்தொகை கோரி விண்ணப்பித்தோருக்கு உடனடியாக உதவித்தொகை வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக சங்கத்திற்கான புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். மாவட்டம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினா் மாநாட்டில் கலந்துகொண்டனா்.
படவரி...
என்கே-16-மாநாடு
நாமக்கல்லில், அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மாநாட்டையொட்டி நடைபெற்ற ஊா்வலத்தில் பங்கேற்றோா்.