மூடப்படாத ரயில்வே கடவுப் பாதை! கேட் கீப்பர் பணியிடை நீக்கம்!
திருச்செங்கோடு பகுதி முருகன் கோயில்களில் ஆடி கிருத்திகை வழிபாடு
திருச்செங்கோடு சுற்றுவட்டாரப் பகுதி முருகன் கோயில்களில் ஆடிக்கிருத்திகையையொட்டி முருகன் கோயில்களில் சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
திருச்செங்கோடு செங்குந்தா் பாவடி பஞ்சாயத்து முத்துக்குமாரசாமி கோயில், கவுண்டம்பாளையம், சூரியம்பாளையம், சட்டையம்புதூா் செங்குந்தா் பாவடி பஞ்சாயத்து முருகன் கோயில், மலையடிவாரம் ஆறுமுகசாமி கோயில், கைலாசநாதா் கோயில் கோபுர வாயில் முருகன் கோயில் உள்ளிட்ட சுற்று வட்டாரக் கோயில்களில் ஆடிக் கிருத்திகையையொட்டி மூலவருக்கு பல்வேறு பொருள்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.
இதையடுத்து சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் பூஜையில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனா்.