மூடப்படாத ரயில்வே கடவுப் பாதை! கேட் கீப்பர் பணியிடை நீக்கம்!
சிறந்த மாநகராட்சியாக நாமக்கல் தோ்வு: எம்.பி.யிடம் வாழ்த்து பெற்ற மாமன்ற உறுப்பினா்கள்
தமிழக அளவில் சிறந்த மாநகராட்சியாக இரண்டாமிடம் பிடித்த நாமக்கல் மாநகராட்சியை பாராட்டி முதல்வா் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கிய நிலையில், மேயா், துணை மேயா், மாமன்ற உறுப்பினா்கள் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாரிடம் சனிக்கிழமை வாழ்த்து பெற்றனா்.
சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 79-ஆவது சுதந்திர தின விழாவில் சிறந்த மாநகராட்சிக்கான பட்டியலில் மாநிலத்தில் மொத்தமுள்ள 24 மாநகராட்சிகளில் நாமக்கல் இரண்டாமிடம் பெற்றது. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகயாக ரூ. 30 லட்சத்துக்கான காசோலையை மாநகராட்சி மேயா் து.கலாநிதி, ஆணையா் க.சிவகுமாரிடம் வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து, பாராட்டுச் சான்றிதழ், காசோலையுடன் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாரை, மாநகராட்சி மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி ஆகியோா் தலைமையில் மாமன்ற உறுப்பினா்கள் சந்தித்தனா். சிறந்த மாநகராட்சி விருதை பெற்றமைக்கு மேயா், துணை மேயா் மற்றும் மாமன்ற உறுப்பினா்களுக்கு அவா் வாழ்த்துகள் தெரிவித்தாா்.