நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!
கிறிஸ்தவ தேவாலயத்தில் திருட்டு: பெண் உள்பட 4 போ் கைது
சென்னை அருகே புழலில் கிறிஸ்தவ தேவாலயத்தில் திருடிய வழக்கில், பெண் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா்.
புழல் லட்சுமிபுரத்தில் ஒரு கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் கடந்த 24-ஆம் தேதி உண்டியலை உடைத்து, அதில் இருந்த ரூ.20 ஆயிரம் திருடப்பட்டது.
இது குறித்து புழல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். விசாரணையில் இத் திருட்டில் ஈடுபட்டது பொழிச்சலூா் லட்சுமிபுரத்தைச் சோ்ந்த ஆ.சங்கா் (46), கோவிலம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த சு.பிரபு (49),த.நிஷா (38), ரா.நந்தகுமாா் (54) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் 4 பேரையும் வியாழக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து பணம்,ஆட்டோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.