கிழக்கு காங்கோவில் துக்க நிகழ்ச்சியில் ஐ.எஸ். ஆதரவுப் படை தாக்குதல்: 60 பேர் பலி!
கிழக்கு காங்கோவில் துக்க நிகழ்ச்சியில் ஐ.எஸ். ஆதரவுப் படையினரின் தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டனர்.
ஆப்பிரிக்காவிலுள்ள கிழக்கு காங்கோவில் துக்க நிகழ்ச்சியொன்றில் அரசுக்கு எதிரான படையினர் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் அந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் 60 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐ.எஸ். ஆதரவு போராட்டக் குழுவான கூட்டணி ஜனநாயகப் படையால் திங்கள்கிழமை இரவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.