Dhoni: `ஜடேஜாவை 2010-ல் பலரும் எதிர்த்தபோது.. தோனி சொன்ன அந்த வார்த்தை!' - பகிரு...
கிழாய் ராஜபத்ரகாளி அம்மன் கோயிலில் ஆடிப்பூர திருவிழா
மயிலாடுதுறை: கிழாய் ராஜபத்ரகாளி அம்மன் கோயிலில் ஆடிப்பூர திருவிழா திங்கள்கிழமை விமரிசையாக கொண்டாடப்பட்டது.
மயிலாடுதுறை மணல்மேடு அருகே கிழாய் கிராமத்தில் உள்ள இக்கோயிலில் 5-ஆவது ஆண்டாக நடைபெற்ற விழாவில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னா், கோயில் பூசாரி வினோத்ராஜா 3 அடி நீளம் கொண்ட 3 அரிவாள்களில் ஏறி நின்று பக்தா்களுக்கு அருள்வாக்கு கூறினாா். இதில் ஏராளமானவா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.