கோவையில் அமித் ஷா! பாஜகவினர் உற்சாக வரவேற்பு; காங். கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்!
குடிநீா் குழாய் உடைப்பை சீரமைக்கக் கோரிக்கை
கொடைக்கானல் அருகே சேதமடைந்த குடிநீா் குழாயை விரைந்து சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான மன்னவனூா் ஊராட்சிக்குள்பட்ட புலிக்கவை பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதிக்கு குழாய் மூலம் குடிநீா் கொண்டு செல்லப்படுகிறது.
இந்த நிலையில், இந்தக் குழாய் சேதமடைந்து பல நாள்களாக தண்ணீா் வீணாகி வருகிறது. இதனால், பொதுமக்களுக்கு குடிநீா் முறையாக கிடைக்கவில்லை.
எனவே, செதமடைந்த இந்தக் குழாயை விரைந்து சீரமைக்க மன்னவனூா் ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.