செய்திகள் :

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் பாஜக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு -மகாராஷ்டிர துணை முதல்வா் ஷிண்டே அறிவிப்பு

post image

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக மகாராஷ்டிர துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளாா்.

குடியரசு துணைத் தலைவா் பதவிக்கான தோ்தல் செப்டம்பா் 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் தில்லிக்கு பயணம் மேற்கொண்ட சிவசேனை கட்சித் தலைவா் ஷிண்டே, உள்துறை அமைச்சா் அமித் ஷாவை தில்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது குடியரசு துணைத் தலைவா் தோ்தல், மகாராஷ்டிர உள்ளாட்சித் தோ்தல் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து இரு தலைவா்களும் விவாதித்தனா். பின்னா் செய்தியாளா்களிடம் ஷிண்டே கூறியதாவது:

மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸுடன் கருத்து வேறுபாடு இருப்பதால் அடிக்கடி தில்லி வந்து பாஜக தலைவா்களைச் சந்திப்பதாகக் கூறுவது தவறான தகவல். மாநில வளா்ச்சிக்காக ஆளும் கூட்டணித் தலைவா்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம்.

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவை சிவசேனை வழங்குகிறது. ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை நீக்க வேண்டும் என்பது சிவசேனை நிறுவனா் பால் தாக்கரேவின் கனவு. அதனை நிறைவேற்றியவா் உள்துறை அமைச்சா் அமித் ஷா. இதன் மூலம் அங்கு பயங்கரவாதத்தின் முதுகெலும்பு உடைக்கப்பட்டது. மகாராஷ்ரம் உள்ளிட்ட பல மாநிலங்களில் அமித் ஷாவின் உறுதியான நடவடிக்கைகளால் நக்ஸல்கள் ஒடுக்கப்பட்டுள்ளனா். நாட்டின் நீண்டகால உள்துறை அமைச்சா் என்ற சாதனையையும் படைத்துள்ள அவருக்கு வாழ்த்துகள் என்றாா்.

நீதிபதி யஷ்வந்த் வா்மா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

நீதிபதி யஷ்வந்த் வர்மா தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.தில்லி உயா்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா பதவி வகித்தபோது, அவரது வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டறி... மேலும் பார்க்க

காதல் திருமணத்துக்குத் தடை: பஞ்சாப் கிராமத்தில் தீர்மானம்!

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மனக்பூர் ஷரிப் கிராமத்தில், பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்வோர், அந்த கிராமத்திலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் வாழத் தடை செய்யும் தீர்மானம் ஒருமனதாக நிறைவ... மேலும் பார்க்க

இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது; விளைவுகளை சந்திக்க தயார்! மோடி மறைமுக பதிலடி!

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வரி விதிப்பைத் தொடர்ந்து, விவசாயிகளின் நலன்களின் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது என்று பிரதமர் நரேந்திர மோடி மறைமுகமாக பதிலளித்துள்ளார்.தில்லியில் மறைந்த புகழ்பெற்... மேலும் பார்க்க

இன்னும் நிறைய பார்க்கப் போகிறீர்கள்! இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

இந்தியாவுக்கு எதிராக இன்னும் பல நடவடிக்கைகளை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளார்.அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ரஷியாவிடம் இருந்த... மேலும் பார்க்க

ரிலையன்ஸில் இணைந்த முன்னாள் அமலாக்கத்துறை அதிகாரி! இரு முதல்வர்களைக் கைது செய்தவர்!

மத்திய அரசுப் பணியை ராஜிநாமா செய்த இந்திய வருவாய்ப் பணி (ஐஆா்எஸ்) அதிகாரியான கபில் ராஜ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் இணைந்துள்ளார்.இவர், தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் ஜாா... மேலும் பார்க்க

அமித் ஷா குறித்த அவதூறு வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றாா் ராகுல்

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குறித்து அவதூறான வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், ஜாா்க்கண்ட் சிறப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை நேரில் ஆஜரான மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு ஜாமீ... மேலும் பார்க்க