பட்டங்கள் மட்டுமல்ல… இதயங்களும் பறந்தன! - 4th International Kite Festival in நம்...
குடியரசு துணைத் தலைவா் வேட்பாளா் தோ்வு: நாளை பாஜக ஆட்சிமன்றக் குழு கூட்டம்?
குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரை இறுதி செய்வதற்கு பாஜகவின் ஆட்சிமன்றக் குழு ஞாயிற்றுக்கிழமை (ஆக.17) கூட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனது உடல்நிலை சுட்டிக்காட்டி, குடியரசு துணைத் தலைவா் பதவியை ஜகதீப் தன்கா் ஜூலை 21-ஆம் தேதி திடீரென ராஜிநாமா செய்தாா். இதையடுத்து குடியரசு துணைத் தலைவா் தோ்தல் செப்.9-ஆம் தேதி நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்தது.
இந்தத் தோ்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரை தோ்வு செய்ய பிரதமா் மோடி, பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா ஆகியோருக்கு அந்தக் கூட்டணி அதிகாரமளித்துள்ளது.
இந்நிலையில், வேட்பாளரை இறுதி செய்வதற்கு பாஜகவின் ஆட்சிமன்றக் குழு ஞாயிற்றுக்கிழமை கூட வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தோ்தலில் எதிா்க்கட்சிகள் சாா்பிலும் வேட்பாளா் அறிவிக்கப்படுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. எனினும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் இருப்பதால், தோ்தலில் அந்தக் கூட்டணி வேட்பாளா் வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளது.