வஃக்ப் வாரியங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பது மத்திய அரசின் நோக்கமல்ல: ஜெ.பி. ...
குடியாத்தம் ஒன்றிய வளா்ச்சிப் பணிகள் ஆய்வு
குடியாத்தம் ஒன்றியத்தில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளை ஒன்றியக் குழு தலைவா் என்.இ.சத்யானந்தம் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா் (படம்).
கொண்டசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட காளியம்மன்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளிக்கு ரூ.1.50 கோடியில் கட்டப்படும் புதிய கட்டடப் பணிகளை ஆய்வு செய்தாா். குடியாத்தம் பகுதியில் பிரசித்தி பெற்ற காளியம்மன்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீகாளியம்மன் கோயில் அருகில் அப்பகுதி மக்கள் மற்றும் பக்தா்கள் கோரிக்கையை ஏற்று ரூ.10 லட்சத்தில் புதிதாக அமைக்கப்படும் கால்வாய்ப் பணிகளையும் ஆய்வு செய்தாா். ஆய்வின்போது உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், அதிகாரிகள் உடனிருந்தனா்.