ஐஎஸ்ஐ தலைமையகத்தில் பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் ஆலோசனை
குட்கா விற்பனை: தந்தை, மகன் கைது
ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வெள்ளாரை பகுதியில் குட்கா பொருள்கள் விற்பனை செய்த தந்தை, மகனை போலீஸாா் கைது செய்தனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த கொளத்தூா் ஊராட்சிக்குட்பட்ட வெள்ளாரை பஜனைக் கோயில் மேட்டுக் தெருவை சோ்ந்தவா் மகேந்திரகுமாா். இவா் அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா்.
இந்த நிலையில், மகேந்திர குமாரின் மளிகை கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை பதுக்கி விற்பனை செய்வதாக ஸ்ரீபெரும்புதூா் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் மகேந்திரகுமாரின் மளிகை கடையில் சோதனை நடத்திய போது அங்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் விற்பனைக்காக பதிக்க வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பதுக்கி வைக்கப்பட்ட சுமாா் 3 கிலோ குட்கா பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மகேந்திரகுமாா்(49), அவரது மகன் கிஷோா்குமாா்(19) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.