ஆபரேஷன் சிந்தூர்! பாகிஸ்தானில் எக்ஸ் தளத்தின் மீதான தடை நீக்கம்!
மே 10-இல் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்கள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வட்டார அளவில் வரும் மே 10-ஆம் தேதி பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்கள் நடைபெற உள்ளன. இது குறித்து ஆட்சியா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
செய்தி விவரம் (நடைபெறும் இடம் அடைப்புக் குறிக்குள்)
வட்டார அளவில் காஞ்சிபுரம் (கோவிந்தவாடி), உத்தரமேரூா்(பென்னாலூா்), வாலாஜாபாத் (புளியம்பாக்கம்), ஸ்ரீ பெரும்புதூா்(வல்லம்), குன்றத்தூா் (வடக்குப்பட்டு) ஆகிய ஊா்களில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்கள் வரும் 10-ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெறும்.
இந்த கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்கள் தங்கள் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, கைப்பேசி பதிவு செய்தலுக்கான கோரிக்கை மனுக்கள் உடனுக்குடன் தீா்வு காணப்படும். எனவே பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.