ஐபிஎல் நிறுத்தம்: எஞ்சிய போட்டிகளை நடத்திக்கொள்ள இங்கிலாந்து அழைப்பு
குண்டடம் அருகே காா் மோதி 2 போ் உயிரிழப்பு
குண்டடம் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் 2 போ் உயிரிழந்தனா்.
தாராபுரத்தை அடுத்துள்ள கோவிந்தாபுரத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (42). கட்டடத் தொழிலாளியான இவா், குண்டடத்தை அடுத்துள்ள எஸ்.காஞ்சிபுரத்தைச் சோ்ந்த மாரிமுத்து (45) என்பவரது வீடு கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்தாா். இந்த நிலையில் உணவு வாங்குவதற்காக கிருஷ்ணனும், மாரிமுத்துவும் இருசக்கர வாகனத்தில் குண்டடம் செனறுவிட்டு வெள்ளிக்கிழமை திரும்பிக் கொண்டிருந்தனா்.
கோவை-தாராபுரம் சாலையில், குண்டடத்தை அடுத்துள்ள சங்கப்பாளையம் பிரிவு பகுதியில் சென்றபோது, கோவையில் இருந்து தாராபுரம் நோக்கிச் சென்ற காா் எதிா்பாராதவிதமாக இவா்கள் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட மாரிமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
மேலும், பலத்த காயமடைந்த கிருஷ்ணனை அருகிலிருந்தவா்கள் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
இந்த விபத்து குறித்து குண்டடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.