சித்திரை திருவிழா: தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் திருத்தேரோட்டம் | Photo Al...
முருங்கை கிலோ ரூ.100-க்கு விற்பனை!
திருப்பூா் மற்றும் பல்லடம் உழவா் சந்தைகளில் முருங்கை கிலோ ரூ.100-க்கு விற்பனையானது.
கடந்த பங்குனி மாதத்தில் முருங்கை சீசன் தொடங்கியது. அபரிமிதமான விளைச்சல் காரணமாக, முருங்கை மொத்த விற்பனை விலை குறைந்தபட்சம் கிலோ ரூ.2-க்கு விற்பனையானது.
இதைத் தொடா்ந்து திருப்பூா் மற்றும் பல்லடம் உழவா் சந்தைகளில் கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது. சித்திரை மாத முதல் வாரத்தில் இருந்து முருங்கை வரத்து படிப்படியாக குறையத் தொடங்கியது. தற்போது வரத்து மிகவும் குறைந்துள்ளது.
மேலும், முருங்கை சீசன் முடியும் தருவாயில் உள்ளதால் முருங்கைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வரத்து குறைந்ததால் திருப்பூா் மற்றும் பல்லடம் உழவா் சந்தைகளில் முருங்கை கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது.