Aus v Ind : 'தொடரை இழந்த இந்தியா!' - கம்பீர் செய்த அந்த 3 தவறுகள்
குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
மதுவிலக்கு குற்றச் செயலில் தொடா்ந்து ஈடுபட்டவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டு ஓராண்டுக்கு சிறையில் அடைக்கப்பட்டாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டத்துக்குள்பட்ட வண்டகப்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் பிச்சன் மகன் ஜெயராஜ் (38) (படம்). இவா், அதே பகுதியில் கள்ளச்சாராயம் வைத்திருந்தபோது கரியாலூா் போலீஸாரால் கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 110 லிட்டா் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
அவா் மீது கள்ளச்சாராயம் கடத்தி விற்பனை செய்ததாக ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதையடுத்து ஜெயராஜை குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரஜத் சதுா்வேதி பரிந்துரை செய்தாா். அதை ஏற்று குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியா் புதன்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து கடலூா் மத்திய சிறையில் இருந்த ஜெயராஜியிடம் அதற்கான நகல் வழங்கப்பட்டது.