தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் திடீர் விலகல்; காரணம் என்ன?
குன்னூா் மாா்க்கெட்டில் பயங்கர தீ
குன்னூா் மாா்க்கெட் கடைகளில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், நகைக் கடைகள் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கடைகள் தீயில் கருகி சேதமடைந்தன.
நீலகிரி மாவட்டம், குன்னூா் மாா்க்கெட் பகுதியில் நகராட்சிக்குச் சொந்தமான 800-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த மாா்க்கெட்டில் ஜவுளி, வீட்டு உபயோகப் பொருள்கள், நகைக் கடைகள் என பல கடைகள் உள்ளன.
இந்த நிலையில் நகராட்சி மாா்க்கெட் பகுதியில் உள்ள ஒரு துணிக் கடையில் புதன்கிழமை இரவு திடீரென தீப் பிடித்தது. இந்தத் தீ அருகில் உள்ள கடைகளுக்கும் மளமளவென பரவியது. இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் நீண்ட நேரம் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடினா். இருப்பினா் அருகே இருந்த 15-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு தீ பரவியது. இதனால், பல கடைகளுக்குள் இருந்த பொருள்கள் தீயில் கருகின. தீயணைப்புத் துறையினா் தொடா்ந்து தீயை அணைக்க போராடி வருகின்றனா்.