Kavin Interview | Vetrimaaran மூலமா தான் Peter Hein-அ Meet பண்ணினேன்! | KISS Mov...
குப்பைகளால் பொதுமக்கள் அவதி
திருக்கடையூா் பேருந்து நிலையம் அருகே குடியிருப்பு பகுதியில் கொட்டப்படும் குப்பை மற்றும் கழிவுகளால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனா்.
திருக்கடையூா் ஊராட்சி பேருந்து நிலையம் அருகே வணிக வளாகம், உணவகங்கள் மற்றும் இறைச்சிக் கடைகளில் இருந்து குப்பைகள் மற்றும் இறைச்சிக் கழிவுகளும், ஊராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளும் கொட்டப்படுகின்றன. இவற்றை பன்றிகள், நாய்கள் கிளறி விடுவதால் துா்நாற்றம் வீசுகிறது.
இதனால், அருகில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள், திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயிலுக்கு வரும் பக்தா்கள், மருத்துவமனை, பள்ளி, கல்லூரி செல்லும் மாணவா்கள் மற்றும் பேருந்து நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா். மேலும், நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. அருகில் வசித்து வரும் குடியிருப்பு வாசிகள் துா்நாற்றத்தால் பல்வேறு இன்னலுக்கு ஆளாவதாக தெரிவிக்கின்றனா்.
மாவட்ட நிா்வாகம் இங்கு கொட்டப்படும் குப்பை கழிவுகளை அகற்றி, கிருமி நாசினி தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.