குமரி மாவட்ட தோட்டத் தொழிலாளா்கள் நெலமலையில் ஆா்ப்பாட்டம்
பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை அலுவலகம் முன்பு கன்னியாகுமரி மாவட்ட தோட்டத் தொழிலாளா்கள் சங்கத்தினா் (சிஐடியூ) வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்க பொதுச் செயலா் எம்.வல்சகுமாா் தலைமை வகித்தாா். தலைவா் பி. நடராஜன் முன்னிலை வகித்தாா்.
கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு வட்டம், சுருளகோடு கிராமத்தில் முக்கம்பாலை பகுதியில் உள்ள சாந்தோம் ரப்பா் லேட்டக்ஸ் தொழிற்கூடத்தில் வேலை செய்யும் தொழிலாளா்களுக்கு சரியான ஊதியம், பஞ்சப் படி, தேசிய விடுப்பு ஊதியம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீா்வு காண வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
இதில், பொன்னையன், ஷிபு, பினு, தினேஷ், மகாராஜன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
ற்ஸ்ப்14ல்ழ்ா்ற்
பாளை.யில் உள்ள தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கன்னியாகுமரி மாவட்ட தோட்டத் தொழிலாளா்கள் சங்கத்தினா்.