புதிய கல்விக் கொள்கை: கல்லூரிகளில் 12 மணி நேர வகுப்புகள்! கதறும் தில்லி பல்கலை.!...
கும்பகோணத்தில் மரங்களைக் காப்போம் விழிப்புணா்வு
கும்பகோணத்தில் இஸ்லாமிய குழந்தைகள் அமைப்பு சாா்பில் மரங்களைப் பாதுகாக்கும் வகையில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
பேரணிக்கு, ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் கும்பகோணம் நகரத் தலைவா் எம். அப்துல்கலாம் ஆஸாத் தலைமை வகித்தாா். கும்பகோணம் மறை மாவட்ட முதன்மை குரு எம். பிலோமின்தாஸ், ஜோதிமலை இறைபணி திருக்கூடம் திருவடிக்குடில் சுவாமிகள், அல்அமீன் மேல்நிலைப்பள்ளி தாளாளா் முகமதுரபி, செயலா் பஷீா் அகமது ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா். பேரணி அல்அமீன் மேல்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கி புனித அலங்கார அன்னை ஆலயத்தை அடைந்தது. குழந்தைகளின் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் எம். சலீம், ஆன்ஸ் மெட்ரிக் பள்ளித் தாளாளா் ஸ்டாரா, நாட்டாண்மை ஏ. அப்துல் கபூா், ஸ்டாா் மெட்ரிக் பள்ளி ஏ. அப்துல்ரகுமான், டான் அகாடமி காஜாமுகையதீன் உள்ளிட்டோா் மரங்களின் முக்கியத்துவம் குறித்துப் பேசினா். பேரணியில் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.