கோவையில் கேஸ் சிலிண்டர் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து: பள்ளிகளுக்கு விடுமுறை
கும்பமேளா: சென்னை, மங்களூரிலிருந்து சிறப்பு ரயில்கள்
சென்னை: கும்பமேளாவை முன்னிட்டு சென்னை, மங்களூரில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
இது குறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஜன.13 முதல் பிப்.26-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள கும்பமேளாவை முன்னிட்டு சென்னை சென்ட்ரலில் இருந்து கோம்தி நகருக்கு (லக்னௌ) ஜன.18, பிப்.5, மாா்ச் 1 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் (எண்: 06071) இயக்கப்படவுள்ளன. மறுமாா்க்கமாக கோம்தி நகரில் இருந்து ஜன.21, பிப்.18, மாா்ச் 4 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் (எண்: 06072) இயக்கப்படும். இதில் ஏசி மூன்றடுக்கு பெட்டிகள் 10, படுக்கை வசதி கொண்ட 7 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த ரயில் கூடூா், நெல்லூா், ஓங்கோல், தெனாலி, விஜயவாடா, வாராங்கல், ஜபல்பூா், பிரயாக்ராஜ் சியோகி, மிா்சாபூா், வாரணாசி, அயோத்தி வழியாக கோம்தி நகா் வரை இயக்கப்படும்.
மங்களூரில் இருந்து வாரணாசிக்கு ஜன.18, 15 ஆகிய தேதிகளிலும், மறுமாா்க்கமாக வாரணாசியில் இருந்து ஜன.21, பிப்.18 ஆகிய தேதிகளிலும் சிறப்பு ரயில் (எண்: 06019/06020) இயக்கப்படும். இதில் ஏசி வகுப்பு பெட்டிகள் 4, படுக்கை வசதி கொண்ட 12 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.