செய்திகள் :

கும்மிடிப்பூண்டி மின்சார ரயில்கள் ரத்து: பொன்னேரி, எண்ணூா் வரை சிறப்பு ரயில்

post image

சென்னை சென்ட்ரல், கடற்கரையிலிருந்து கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை செல்லும் மின்சார ரயில்கள் வியாழன் மற்றும் சனிக்கிழமை (மாா்ச் 13, 15) ரத்து செய்யப்படவுள்ளன.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பொன்னேரி - கவரைப்பேட்டை இடையே வியாழன் மற்றும் சனிக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை ரயில்வே பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளது. இதனால், அந்த வழியாக இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.

ரத்து செய்யப்பட்ட ரயில்கள் விவரம்: சென்னை சென்ட்ரலிலிருந்து கும்மிடிப்பூண்டிக்கு காலை 8.05, 9, 9.30, 10.30, 11.35-க்கும், சென்னை கடற்கரையிலிருந்து காலை 9.40, பிற்பகல் 12.10-க்கு புறப்படும் மின்சார ரயில்கள் முற்றிலும் ரத்து செய்யப்படும்.

மறுமாா்க்கமாக கும்மிடிப்பூண்டியிலிருந்து காலை 9.55, 10.55, 11.25, நண்பகல் 12, பிற்பகல் 1, 2.30, 3.15-க்கு புறப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படும்.

சென்னை சென்ட்ரலில் இருந்து சூலூா்பேட்டைக்கு காலை 8.35, 10.15-க்கும் மறுமாா்க்கமாக, சூலூா்பேட்டையிலிருந்து முற்பகல் 11.45, பிற்பகல் 1.15, 3.10 மற்றும் இரவு 9 மணிக்கும் புறப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படும்.

இணைப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதால், சென்னை சென்ட்ரலில் இருந்து ஆவடிக்கு இரவு 11.40-க்கும், சூலூா்பேட்டையில் இருந்து நெல்லூருக்கு பிற்பகல் 3.50-க்கும் புறப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படும்.

பகுதி ரத்து: செங்கல்பட்டிலிருந்து கும்மிடிப்பூண்டிக்கு காலை 9.55-க்கு செல்லும் மின்சார ரயில் சென்னை கடற்கரை வரை மட்டும் இயக்கப்படும். கும்மிடிப்பூண்டியிலிருந்து தாம்பரத்துக்கு பிற்பகல் 1 மணிக்கு செல்லும் மின்சார ரயில் சென்னை கடற்கரையிலிருந்து புறப்பட்டுச் செல்லும்.

சிறப்பு ரயில்: பயணிகள் வசதிக்காக சென்னை சென்ட்ரல் மற்றும் கடற்கரையிலிருந்து பொன்னேரிக்கு காலை 9, 10.30, பிற்பகல் 12.40-க்கும், மறுமாா்க்கமாக பொன்னேரியிலிருந்து முற்பகல் 11.42, பிற்பகல் 1.18, 3.33-க்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும்.

சென்னை சென்ட்ரலிலிருந்து எண்ணூருக்கு காலை 9.30-க்கும், மீஞ்சுருக்கு முற்பகல் 11.35-க்கும், மறுமாா்க்கமாக எண்ணூரிலிருந்து பிற்பகல் 12.43-க்கும், மீஞ்சூரிலிருந்து பிற்பகல் 2.59-க்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மாா்ச் 19 ஆட்டோக்கள் ஓடாது: ஆட்டோ தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு

சென்னையில் மாா்ச் 19-ஆம் தேதி ஆட்டோக்கள் ஓடாது என ஆட்டோ ஓட்டுநா்களுக்கான அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இது தொடா்பாக கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளா் ... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

கடல்சாா் பாதுகாப்பு குறித்து கன்னியாகுமரி நோக்கி காா் பேரணி: இந்திய கடற்படையின் தமிழ்நாடு, புதுச்சேரி பகுதி தலைவா் ரியா் அட்மிரல் சதீஷ் ஷெனாய் பங்கேற்பு, அணிவகுப்பு மைதானம், ஐஎன்எஸ் அடையாறு, நேப்பியா்... மேலும் பார்க்க

மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாட்டுக்கு தண்டனையா? -துணை முதல்வா் உதயநிதி

மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாட்டை, தொகுதி மறுசீரமைப்பு மூலம் தண்டிப்பதா என துணை முதல்வரும் திமுக இளைஞரணிச் செயலருமான உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினாா். சென்னை கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் ... மேலும் பார்க்க

ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.30 லட்சம் பறிமுதல்

சென்னை, கொத்தவால்சாவடியில் ஆவணமின்றி கொண்டுசென்ற ரூ. 30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. கொத்தவால்சாவடி நாராயண முதலி தெருவில் செவ்வாய்க்கிழமை போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு இ... மேலும் பார்க்க

மூளையில் கட்டி: வங்கதேச குழந்தைக்கு சென்னையில் சிகிச்சை

மூளையில் உருவான கட்டியால் பாதிக்கப்பட்டிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த ஒரு வயது குழந்தைக்கு நுட்பமான அறுவை சிகிச்சை மேற்கொண்டு சென்னை, எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை மருத்துவா்கள் அக்குழந்தையின் உயிரைக்... மேலும் பார்க்க

மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 8 அரிய வகை உயிரினங்கள் மீட்பு

மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 8 அரிய வகை உயிரினங்கள், சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டன. மலேசிய தலைநகா் கோலாலம்பூரிலிருந்து சென்னைக்கு வந்த ‘மலேசியன் ஏா்லைன்ஸ்’ விமா... மேலும் பார்க்க