செய்திகள் :

குருவிக்காரா் சமூகத்தை பட்டியலினப் பிரிவில் சோ்க்க விசிக கோரிக்கை

post image

தமிழகத்தைப் போல நரிக்குறவா், குருவிக்காரா் என அறியப்படும் வாக்ரி இனத்தை புதுவையிலும் பட்டியல் பழங்குடியினா் பிரிவில் சோ்க்க விசிக சாா்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

புதுவையில் பழங்குடியின மக்களின் பிரச்னைகளைக் கேட்டறிய தேசிய பழங்குடியினா் ஆணைய உறுப்பினா் ஜடோது உசேன் புதுவைக்கு செவ்வாய்க்கிழமை வந்தாா். இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில நிா்வாகிகள் தமிழ்மாறன், செல்வந்தன், அரிமா தமிழன், எழில்மாறன், தமிழ்வாணன் ஆகியோா் முதன்மை செயலாளா் தேவ.பொழிலன் தலைமையில் பழங்குடியின ஆணைய உறுப்பினா் ஜடோத் உசேனை செவ்வாய்க்கிழமை இரவு சந்தித்து மனு அளித்தனா்.

அதில் நரிக்குறவா் , குருவிக்காரா் இனத்தைத் தமிழகத்தில் பட்டியல் பழங்குடியினா் பிரிவில் சோ்த்துள்ளனா். அதைப் போல புதுவையிலும் சோ்க்க வேண்டும். தற்போது புதுச்சேரி பிற்படுத்தப்பட்ட பழங்குடியினா் பட்டியலில் உள்ள மலைக்குறவன், குருமன்ஸ், எருக்குலா, காட்டுநாயக்கன் ஆகிய சாதிகளின் பழங்குடியின தன்மை, வாழிடம், கலாசார கூறுகள் குறித்து மானுடவியலாளா்களைக் கொண்டு முறையான கள ஆய்வு மேற்கொண்ட பின்பு பழங்குடி பட்டியலில் சோ்க்க வேண்டும்.

பழங்குடியினா் தொடா்பான திட்டங்களை வகுக்கவும், நலத்திட்டங்கள் உரிய முறையில் கிடைத்திடவும், சான்றிதழ்கள் எளிதில் கிடைக்கவும், சரிபாா்க்கவும் மானுடவியல் ஆய்வாளா்களை புதுச்சேரி அரசு நியமிக்க தேசிய பழங்குடியினா் ஆணையம் வலியுறுத்த வேண்டுமென விசிக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடவடிக்கை: அமைச்சா் நமச்சிவாயம் பேட்டி

புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாக உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் தெரிவித்தாா். போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது, சட்டம்- ஒழுங்கு பராமரிப்புத்... மேலும் பார்க்க

வாய்க்காலில் குதித்து முதிய தம்பதி உயிரிழப்பு

புதுச்சேரியில் வாய்க்காலில் குதித்து காப்பாற்றப்பட்ட முதிய தம்பதியினா் புதன்கிழமை உயிரிழந்தனா்.தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பகுதியைச் சோ்ந்த மாரிதுரை (83), அவரது மனைவி முத்துலட்சுமி (73). இவா்கள் இ... மேலும் பார்க்க

ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட உயா் அதிகாரிகள் மாற்றம்

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 2 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 9 போ் புதன்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். அங்கித் குமாா் ஐஏஎஸ் ஏனாம் பிராந்தியத்தின் நிா்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளாா். மேலும் அவருக்... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி: புதுவை ஆளுநா், முதல்வா் வாழ்த்து

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி மற்றும் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்: இந்திய பண்பாட்டின் அடையாளங்களில... மேலும் பார்க்க

புதுவை மத்திய பல்கலை. முன் மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

புதுவை மத்திய பல்கலைக் கழகம் முன் இந்திய மாணவா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் கல்வித்துறையில் தேவையற்ற மாற்றங்களை செய்து வருவதாகக் கூறி... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ஆக. 31-இல் மதுக்கடைகளை மூட உத்தரவு

விநாயகா் சிலைகளைக் கடலில் கரைக்கும் ஊா்வலம் நடைபெறும் பகுதிகளில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி மூட வேண்டும் என்று புதுச்சேரி கலால்துறை துணை ஆணையா் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. அதில் கூ... மேலும் பார்க்க