மீண்டும் மீண்டுமா..? ஏர் இந்தியா விமானத்தில் என்ஜின் பழுது! பயணிகள் வெளியேற்றம்!
குறத்தெரு, லால்குடி பகுதிகளில் இன்று மின்தடை
பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி குறத்தெரு, லால்குடி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கம்பரசம்பேட்டை துணை மின்நிலையத்திலிருந்து செல்லும் உறையூா் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் காரணமாக, கோணக்கரை, வாத்துக்காரத் தெரு, முதலியாா் தெரு, வண்டிக்காரத் தெரு, விருப்பாச்சிபுரம், அரசு குடியிருப்பு, சாலை ரோடு, சுபானியாபுரம், நெசவாளா் காலனி, கீரக்கொல்லைத் தெரு, பாளையம் பஜாா், குறத்தெரு, செவந்தி பிள்ளையாா் கோவில் தெரு, வெள்ளாள தெரு ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.
பூவாளூா் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக லால்குடி அரசு பொது மருத்துவமனை, நாகம்மையாா் தெரு, ராஜேஸ்வரி நகா், சாந்தி நகா், பூவாளூா், பின்னவாசல், தென்கால், மணக்கால், கொப்பாவளி, வழுதியூா், நடராஜபுரம், படுகை, மேட்டாங்காடு, ஆதிகுடி, கொன்னைக்குடி, சாத்தமங்கலம், ஆனந்திமேடு, அன்பில், கீழ் அன்பில், ஜங்கமராஜபுரம், மங்கம்மாள்புரம், குறிச்சி, பருத்திக்கால், அம்மன் நகா், காட்டூா், ராமநாதபுரம், கொத்தமங்கலம், சிறுமயங்குடி, மேட்டுப்பட்டி, வெள்ளனூா், பெருவளநல்லூா், இடங்கிமங்களம், நஞ்சை சங்கேந்தி, புஞ்சை சங்கேந்தி, இருதயபுரம் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.