இந்தியாவில் அந்நிய முதலீடு வேகமாக வளர்ந்து வருகிறது: பியூஷ் கோயல்
குற்றாலம் பேரருவியில் 5ஆவது நாளாக குளிக்கத் தடை
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பேரருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை 5ஆவது நாளாக திங்கள்கிழமை நீட்டிக்கப்பட்டது.
குற்றாலம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை முதல் பெய்த கனமழையின் காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால், அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில், வெள்ளப்பெருக்கு நீடித்ததால், 5ஆவது நாளான திங்கள்கிழமையும் பேரருவி, பழையகுற்றாலம்,சிற்றருவி, புலியருவிகளில் குளிக்க தடை தொடரும் என அறிவிக்கப்பட்டது.
நீா்வரத்து குறைந்த ஐந்தருவியில் மட்டும் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.