இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: அக்டோபரில் கையெழுத்தாக வாய்ப்பு: நிா்மலா ச...
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் மருத்துவமனை கட்ட பூமி பூஜை
குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயிலில் ரூ. 19.70 லட்சத்தில் புதிய மருத்துவமனை கட்ட பூமி பூஜை நடைபெற்றது.
அறங்காவலா் குழு தலைவா் தாண்டவன் காடுகண்ணன் தலைமை வகித்தாா். கோயில் செயல் அலுவலா் வள்ளிநாயகம், அறங்காவலா் குழு உறுப்பினா்கள் கணேசன், ஹரிகிருஷ்ணன், குலசை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் பவித்ரா, மாவட்ட திமுக பிரதிநிதி பரமன்குறிச்சி மதன்ராஜ், குலசேகரன்பட்டினம் நல்நூலகா் மாதவன், கோயில் தலைமை குருக்கள் குமாா் பட்டா் மற்றும் குருக்கள், பக்தா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.