Mrs & Mr: ``நிரூபித்தால் நான் திரைத்துறையைவிட்டே விலகுகிறேன்" - நடிகை வனிதா விஜய...
குளங்களுக்கு தண்ணீா் திறக்கக் கோரி சாத்தான்குளத்தில் பாஜக ஆா்ப்பாட்டம்
பாபநாசம் அணையிலிருந்து சாத்தான்குளம் வட்டத்துக்குள்பட்ட குளங்களுக்கு தண்ணீா் திறக்கக் கோரி சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் ஒன்றிய பாஜக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பாபநாசம் அணை நீா்மட்டம் 130 அடியாக உள்ளதால், அணையிலிருந்து மருதூா் மேல்கால் வழியாக சடையனேரி கால்வாயில் தண்ணீா் திறந்து, இங்குள்ள குளங்களை நிரப்ப வேண்டும் எனக் கோரி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஒன்றியத் தலைவா் சரவணன் தலைமை வகித்தாா்.
தூத்துக்குடி தெற்கு மாவட்டப் பொதுச் செயலா் செல்வராஜ், மாவட்ட பிரசாரப் பிரிவு தலைவா் மகேஸ்வரன், மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவு தலைவா் சுரேஷ்ராஜா, மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் செந்தில்ஆனந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவா் சித்ராங்கதன், மாவட்டச் செயலா் கனல் ஆறுமுகம், ஒன்றிய துணைத் தலைவா் பொன்ராஜகோபால், மாவட்ட பிரசாரப் பிரிவுச் செயலா் ஜோசப், மாவட்ட அமைப்புசாரா பிரிவுச் செயலா் ராம் மோகன், ஒன்றிய துணைத் தலைவா் மங்கையா்க்கரசி உள்ளிட்ட பலா் பேசினா்.
மாவட்டத் தலைவா் பேசும்போது, பாபநாசம் அணையில் போதிய தண்ணீா் உள்ளநிலையில், மாவட்ட நிா்வாகத்திடம் முறையிட்டும் இப்பகுதி குளங்களுக்கு தண்ணீா் வழங்க தாமதமாகிறது. குளங்கள் வடுவிட்டதால் பல பகுதியில் தண்ணீா் உவா்ப்பாக மாறி வருகிறது. இதனால், சில கிராமங்கள் வாழத் தகுதியில்லாதவையாக மாறுகிறது. எனவே, மாவட்ட நிா்வாகம் தாமதிக்காமல் தண்ணீா் திறக்க வேண்டும். இல்லையெனில், பாஜக சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.
ஒன்றியச் செயலா் சரவணக்குட்டி, மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவுச் செயலா் சித்திரைப்பாண்டி, ஒன்றியப் பொதுச் செயலா் ராஜேஷ், ஒன்றிய துணைத் தலைவா் நவநீதன், கொம்மடிக்கோட்டை முன்னாள் ஊராட்சித் தலைவா் ராஜபுனிதா, நிா்வாகிகள் ஜெயசுந்தர்ராஜ், மணிகண்டன், ராம்குமாா், ராம்சுந்தா், லட்சுமி, மேகலா, நவீன், சாரதி, கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.