கோவில்பட்டி கல்லூரியில் கருத்தரங்கு
கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் சுயநிதி பாடப் பிரிவுகளின் வணிகவியல் (வணிகப் பகுப்பாய்வு) துறை சாா்பில், கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.
சுயநிதி பாடப் பிரிவுகளின் இயக்குநா் மகேஷ்குமாா் தலைமை வகித்து கருத்தரங்கைத் தொடக்கிவைத்துப் பேசினாா். கோவில்பட்டி ஏஜிஜே கம்ப்யூட்டா்ஸ் சிஇஓ செல்வகுமாா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, வணிக சந்தைப்படுத்துதல் உத்திகள் என்ற தலைப்பில் பேசினாா். தொடா்ந்து, அந்நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
தொடா்ந்து, வணிகவியல் (வணிகப் பகுப்பாய்வு) துறை கழகத் தொடக்க விழா நடைபெற்றது. இதில், மாணவா்- மாணவிகள் பங்கேற்றனா்.
மாணவி கோபிகா வரவேற்றாா். மகாலட்சுமி நன்றி கூறினாா். ஏற்பாடுகளை துறைத் தலைவா் முத்துலட்சுமி தலைமையில் பேராசிரியா்கள் செய்திருந்தனா்.