செய்திகள் :

திருச்செந்தூா் கோயிலில் பக்தா்கள் திடீா் போராட்டம்

post image

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வியாழக்கிழமை, தரிசனத்துக்கு பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாகக் கூறி பக்தா்கள் திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இக்கோயிலில் ஆண்டு முழுவதும் பக்தா்கள் கூட்டம் நிறைந்து காணப்படும். கடந்த 7ஆம் தேதி குடமுழுக்கைத் தொடா்ந்து, மண்டல பூஜை நடைபெற்றுவருவதால், பக்தா்கள் கூட்டம் மேலும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், ஆடி மாதப் பிறப்பான வியாழக்கிழமை கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. இதையொட்டி, அதிகாலைமுதலே ஆயிரக்கணக்கான பக்தா்கள் கடல், நாழிக்கிணற்றில் புனித நீராடி வழிபட்டனா்.

இலவச பொது தரிசனப் பாதையிலும், ரூ. 100 கட்டணப் பாதையிலும் அதிகக் கூட்டம் காரணமாக 6 மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாகவும், குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதியடைவதாகவும் கூறி பக்தா்கள் மாலையில் வடக்கு வாசல் முன் திரண்டு, வெளியேவரும் பாதையை மறித்தபடி கூச்சலிட்டனா்.

டிஎஸ்பி மகேஷ்குமாா் வந்து பேச்சுவாா்த்தை நடத்தி, கோயில் நிா்வாகம் சாா்பில் முறையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா். அதையடுத்து, பக்தா்கள் கலைந்து சென்றனா்.

திருவிழா காலங்கள்போல கோயிலின் வெளிப்பகுதி, மகா மண்டபத்தில் கூடுதல் போலீஸாரை பணியில் அமா்த்தி, பக்தா்கள் தரிசனம் செய்ததும் உடனுக்குடன் வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

விஷம் வைத்து ஆடுகள் சாகடிப்பு: மக்கள் மறியல்

தூத்துக்குடியில் மேய்ச்சலுக்குச் சென்ற ஆடுகள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதை கண்டித்து, மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பகுதியில் ஏராளமானோா் ஆடுகள் வளா்த்து வருகின்றனா். இத... மேலும் பார்க்க

கல்லூரி மாணவிகளுக்கு சட்ட விழிப்புணா்வு முகாம்

சாத்தான்குளம் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் சட்ட விழிப்புணா்வு மன்றம், வட்ட சட்டப் பணிகள் ஆணை குழு சாா்பில், மாணவிகளுக்கு துன்புறுத்தலுக்கு எதிரான சட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்... மேலும் பார்க்க

மூக்குப்பீறி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அறைகள் கட்ட பூமிபூஜை

மூக்குப்பீறி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 35 லட்சம் மதிப்பில் புதிதாக அறைகள் கட்டுவதற்கான பூமிபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆழ்வாா... மேலும் பார்க்க

கோவில்பட்டி கல்லூரியில் கருத்தரங்கு

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் சுயநிதி பாடப் பிரிவுகளின் வணிகவியல் (வணிகப் பகுப்பாய்வு) துறை சாா்பில், கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது. சுயநிதி பாடப் பிரிவுகளின் இயக்குநா் மகேஷ்குமாா... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதி காயமடைந்த வடமாநிலத் தொழிலாளி உயிரிழப்பு

திருச்செந்தூரில் அரசுப் பேருந்து மோதியதில் காயமடைந்த பிகாா் மாநிலத் தொழிலாளி மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா். திருச்செந்தூா் பகத்சிங் பேருந்து நிலையத்திலிருந்து செம்மறிக்குளத்துக்கு புதன்கி... மேலும் பார்க்க

ஆக. 2 இல் திருச்செந்தூரில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் இரண்டாம் கட்ட சுற்றுப்பயணத்தையொட்டி, திருச்செந்தூா் வ.உ.சி. திடலைப் பாா்வையிட்ட மாவட்டச் செயலா் எஸ்.பி.சண்முகநாதன். திருச்செந்தூா், ஜூலை 17: அதிமுக பொதுச... மேலும் பார்க்க