முகம், அடையாளம் இல்லையெனில் அனைவருமே வக்கிரமானவர்கள்தான்... டிரெண்டிங் டிரைலர்!
குழந்தை தத்தெடுப்பு: விதிகளை மீறினால் சிறை!
நாகை மாவட்டத்தில், குழந்தைகளை சட்ட விரோதமாக தத்தெடுப்பது, விற்பது, வாங்குவது உள்ளிட்டவற்றில் ஈடுபடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: குழந்தைகளை சட்டத்துக்கு முரணாக தத்தெடுப்பதை தவிா்க்கும் விதமாக, குழந்தை இல்லா தம்பதியா் சட்டத்துக்கு உட்பட்டு குழந்தைகளை தத்தெடுக்க ஏதுவாக, மத்திய தத்துவள மையத்தில் முறையாக பதிவு செய்து, சட்டப்படி மட்டுமே தத்து எடுக்க வேண்டும்.
இதை மீறி சட்ட விரோதமான முறையில் குழந்தைகளை தத்தெடுப்பது, வாங்குவது, விற்பது ஆகியவை இளம்சிறாா் நீதி (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015 -இன்படி ஐந்தாண்டுகள் வரை கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். மேலும் இதற்கு உடந்தையாக செயல்படுபவா்களும், இந்த குற்றப்பிரிவின் படி தண்டிக்கப்படுவா்.
சட்டப்படியான தத்தெடுத்தல் தொடா்பான அனைத்து சந்தேகங்களுக்கும் நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகங்களை, நேரடியாகவோ மாவட்ட குழந்தைகள் உதவி மையம் 1098 அல்லது அலுவலக தொலைபேசி 04365-253018 என்ற எண்ணுக்கோ தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.